பதிப்பாசிரியர்: ச.அம்பிகைபாகன். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அனுபந்தம், ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, மார்கழி 1960. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xix, 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×10.5 சமீ.
திருக்கேதீச்சரத்தில் சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜத்தின் 55ம் ஆண்டுவிழாவும் மகாநாடும் மார்கழி 1960இல் இடம்பெற்றிருந்தது. அச்சைவ மாநாட்டில் நிகழ்த்தப்பெற்ற வரவேற்புரைகள், சிறப்புரைகள், தலைமையுரைகள் முதலியவற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மாநாட்டுக்குப் பன்னாட்டுப் பெரியோர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2991).