பொ.சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பொ.சிவப்பிரகாசம், இல.7, விபுலானந்த வீதி, கொழும்புத்துறை மேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்;: யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபை அச்சகம்).
viii, 226 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ.
தென்னிந்தியாவிலுள்ள பதினாறு சைவத் திருத்தலங்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகளையும் ஈழத்து நல்லூர் பற்றிய ஒரு கட்டுரையையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. சிதம்பரம், மாநகர் மதுரை (ஆலவாய்), திருக்காளத்தீஸ்வரர், நல்லூரிலே நாவலரின் புராண படனம், திருப்பெருந்துறையில் திருவாதவூரடிகள், திருச்செந்தூர், தஞ்சாவூர், பெரியபுராணம் தந்த சேக்கிழார் சுவாமிகள், தம்பிரான் தோழர், திருநெல்வேலி, காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் (காஞ்சிபுரம்), நடனம் ஆடினார், திருவாலங்காடு, திருவாரூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருக்குற்றாலம் ஆகிய 17 அத்தியாயத் தலைப்புகளில்; இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233290).