அகில இலங்கைக் கம்பன் கழகம். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் திரு பொன். வல்லிபுரம் அவர்களின் சதாபிஷேக வெளியீடு, 17யு, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
xvi, 396 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ.
சைவர்களின் நித்திய வழிபாட்டுக்குரிய அருட்பாடல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள இந்நூலில் கணபதி கலசம் என்ற முதல் பிரிவில் விநாயகர் தனிப்பாடல்கள், விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை, விநாயகர் கவசம், பிள்ளையார் கதை என்பனவும், சிவகலசம் என்ற இரண்டாம் பிரிவில் சம்பந்தர் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், மாணிக்கவாசகர் திருவாசகம், மந்திரத் திருமுறை, அர்ச்சனைத் திருமுறை, ஈழத்துத் திருமுறை, பஞ்சபுராணம் ஆகிய எட்டு அம்சங்களும், தொடர்ந்து விஷ்ணு கலசம், சக்தி கலசம், லக்ஷ்மி கலசம், வாணி கலசம், ஸ்கந்த கலசம், பல்தெய்வக் கலசம், ஞானக் கலசம் ஆகிய பிரவுகளின் கீழ் துதிப்பாடல்களும், அந்தாதிகளும், தனிப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53618).