10155 கேதார கௌரி விரதம்.

ஆறுமுகம் அரசரெத்தினம். களுவாஞ்சிக்குடி: திருவருள் நூல்வெளியீட்டுக் குழு, களுதாவளை, 5வது பதிப்பு, ஜுன் 2003, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: நியூ கீன், இல. 73, முனை வீதி).

iv, 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

நுலாசிரியர் களுவாஞ்சிக்குடியில் உள்ள களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்தவர். விரத வரலாறு பற்றிய பிருங்க மகரிஷியின் கதையை பன்னிரண்டு வரிகள் கொண்ட பதினாறு பாடல்களில் எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கக்கூடியதாக அழகுறக் கூறுகின்றார். அடுத்து வரும் ஏழு பாடல்களில் காப்பின் மகிமை பற்றிக் கூறி அம்பாளைத் துதித்து இறைஞ்சுவதாகவும், பத்திச் சுவை பரப்புகின்றார். ‘சிவசக்தி போற்றி’ என்னும் தலைப்பில் சிவனையும் சக்தியையும் ஒன்பது பாடல்களில் நூற்றியெட்டு நாமங்களால் போற்றி அர்ச்சனை மாலையாக அமைத்துள்ளார். நூற்பயனும் வாழியும் அமையப்பெற்றுள்ளதுடன் கதையின் சுருக்கத்தை வசன நடையிலும் தந்துள்ளார். அரும்பத விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்