10158 சித்திராப் பௌர்ணமியும் சித்திரபுத்திர நாயனார் கதையும்.

தி.தவரத்தினம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கனகா பதிப்பகம், காரைநகர், இணை வெளியீடு, கொழும்பு 12: போனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், இல. C,G 6, சென் செபஸ்தியன் தொடர் மாடி, சென். செபஸ்தியன் வீதி, குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிறப்பிக்ஸ், இணைப் பதிப்பு, கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

iv, 112 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7226-15-6.

பௌர்ணமித் திதிக்கு சிறப்பொன்றுண்டு. இலங்கையில் இந்து, பௌத்த சமயத்தவர் பௌர்ணமியை சிறப்பாகக் கொண்டாடுவர். இவ்விரதம் தாயை நினைந்து அனுட்டிக்கும் திதியுமாகும். இவ்விரதத்தைப் 12 மாதங்களிலும் அனுஷ்டிக்க முடியாதவர்கள் சித்திரை மாதத்து பௌர்ணமித் திதியில் விரதமிருந்து தமது பிதுர் கடன்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றொரு மரபும் உள்ளது. இவ்வகையில் சித்திரை மாதத்துப் பௌர்ணமித் திதியும், சித்திரை நட்சத்திரமும் கூடிய நாளில் சித்திரபுத்திரனார் விரதம் அனுட்டிக்கப்படுகிறது. ஆலயங்களிலே புகழேந்திப் புலவர் இயற்றிய சித்திரபுத்திர நாயனார் கதை படிக்கப்படுகின்றது. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. (1) சித்திரபுத்திரனார் கதை. (2) மார்க்கண்டேயர் கதை, (3) அமராவதி கதை. புத்திரபாக்கியம் இன்மையால் இந்திரன்-இந்திராணி இருவரும் மனம் வருந்தி கைலையங்கிரி வாசனான சிவபெருமானிடம் வேண்டித் தவமிருக்க இறைவன் தனக்கு பாவ-புண்ணியக் கணக்கை எழுதும் சித்திரபுத்திரனாரை மகனாகப் பிறக்க அனுக்கிரகம் செய்கிறார். ஆகவே அவரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் சிறப்பு பற்றி இக்கதை கூறுகின்றது. நூலாசிரியர் யாழ். விக்டோரியா கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68798). 

ஏனைய பதிவுகள்