10160 சிவ விரத மான்மியக் கதைகள்.

சி.விசாலாட்சி. கொழும்பு: ஸ்ரீ பூபாலவிநாயகர் ஆலயம், பேலியாகொடை, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (வத்தளை: காரைநகர் பாலாஅச்சகம்).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கிளிநொச்சி குருகுலத்தவரால் சாமியம்மா என அன்புடன் வழங்கும் சிவமயச்செல்வி, சைவநன்மணி, கொழும்பு பேலியகொடை ஸ்ரீ பூபால விநாயகர் ஆலய ஆதீனப் புலவர் சி.விசாலாட்சி அம்மையார் அவர்கள் எழுதிய ஆன்மீக நூல் இது. பிரமோத்திர காண்டம் என்னும் பழைய தமிழ் நூலில் அடங்கியுள்ள செய்யுட்களை உரைநடைப்படுத்தி, சிறிய கதைகளாக்கி இந்நூலில் எளிய வடிவில் வழங்கியுள்ளார். சமய வாழ்வின் அடிப்படையாக விளங்கும் இறைபக்தியைப் பூசை, ஜபம், தியானம், ஆலய வழிபாடு, விரதம், திருத்தொண்டு முதலியவற்றின் மூலம் வளர்க்கலாம் என்னும் கருத்தை வலியுறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15050).

ஏனைய பதிவுகள்