10162 திண்ணபுர அந்தாதி: மூலமும் உரையும்.

கார்த்திகேயப் புலவர் (மூலம்), சொ.சிங்காரவேலன் (உரையாசிரியர்). கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50, Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 3வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, மார்ச் 1984,  2வது பதிப்பு, ஜனவரி 1985. (கொழும்பு 13: எம்.எஸ்.அச்சகம், 52/42, ஆண்டிவேல் வீதி).

244 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ.

காரைநகர் கார்த்திகேயப் புலவர் செய்த அரியபல நூல்களுள் திண்ணபுர அந்தாதியும் ஒன்று. இவருடைய தந்தையார் முருகேசு ஐயரும் பெரும் புலவராக விளங்கியவர். திண்ணபுர அந்தாதி, திண்ணபுரம் எனவும், ஈழத்துச் சிதம்பரம் எனவும் அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் மீது பாடப்பெற்றது. அந்தாதி என்பது ஒரு பாட்டின் அந்தம் அடுத்த பாட்டின் ஆதியாக வருவது. அத்துடன் நூறாவது பாடலின் இறுதிச் சொல் முதலாம் பாடலின் முதற்சொல்லாகவும் அமைவது. இவ்வந்தாதிப் பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமையப்பெறுபவை. கவிதைநயமும் பக்திச் சுவையும் கலந்த ஒரு பெரும்படையலாக திண்ணபுர அந்தாதி அமைந்துள்ளது. திண்ணபுரத்தின் இயற்கை வனப்பும், அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாட்டு விழுமியங்களும் பக்தி மேம்பாடும் பாடல்களில் ஆங்காங்கே பொதிந்துள்ளன. இந்நூல் கலாநிதி வைத்தீஸ்வரக் குருக்களின் வேண்டுகோளுக்கிணங்க,  கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் மூலம் தி.விசுவலிங்கம் தம்பதியினர் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். உரையாசிரியர், தமிழகத்தின் மயிலாடுதுறை தருமைஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50401).

12A26 திண்ணபுர அந்தாதி: மூலமும் உரையும்.

கார்த்திகேயப் புலவர் (மூலம்), சொ.சிங்காரவேலன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர்இ 2வது பதிப்பு, ஜனவரி 1985, 1வது மூலப் பதிப்பு, இரத்தாட்சி பங்குனி 1924. (தமிழ்நாடு: ஸ்ரீ குமரகுருபரர் அச்சகம், ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்).

(8), 172 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

காரைநகர் கார்த்திகேயப் புலவர் செய்த அரியபல நூல்களுள் திண்ணபுர அந்தாதியும் ஒன்று. இவருடைய தந்தையார் முருகேசு ஐயரும் பெரும் புலவராக விளங்கியவர். திண்ணபுர அந்தாதி, திண்ணபுரம் எனவும், ஈழத்துச் சிதம்பரம் எனவும் அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் மீது பாடப்பெற்றது. அந்தாதி என்பது ஒரு பாட்டின் அந்தம் அடுத்த பாட்டின் ஆதியாக வருவது. அத்துடன் நூறாவது பாடலின் இறுதிச் சொல் முதலாம் பாடலின் முதற்சொல்லாகவும் அமைவது. இவ்வந்தாதிப் பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமையப்பெறுபவை. கவிதைநயமும் பக்திச் சுவையும் கலந்த ஒரு பெரும்படையலாக திண்ணபுர அந்தாதி அமைந்துள்ளது. திண்ணபுரத்தின் இயற்கை வனப்பும், அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாட்டு விழுமியங்களும் பக்தி மேம்பாடும் பாடல்களில் ஆங்காங்கே பொதிந்துள்ளன. உரையாசிரியர், தமிழகத்தின் மயிலாடுதுறை தருமைஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராவார். கயிலை மா முனிவரின் அருளாசியும் திருவுருவப் படமும், நூன்முகம், திண்ணபுர அந்தாதி (மூலமும் உரையும்), உரையில் எடுத்தாளப்பட்ட நூல்கள், பாடல் முதற்குறிப்பு அகராதி, பிழையும் திருத்தமும் ஆகிய உள்ளுறைத் தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10228. பின்னைய கனேடிய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 10162. அப்பதிப்பில் 1வது பதிப்பு அச்சுப்பிழையாக 1984 என்றுள்ளது. திருத்தப்படவேண்டும்.)

ஏனைய பதிவுகள்