காஞ்சிபுரம் க. வச்சிரவேலு முதலியார் (உரையாசிரியர்), ந.சுப்பையபிள்ளை (உரைக் குறிப்பு). வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், செட்டியார் மடம், 1வது பதிப்பு, 1968. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், 57, பிரதான வீதி).
(8), 24 பக்கம், விலை: 60 சதம், அளவு: 17×12 சமீ. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச்செய்த திருக்கேதீச்சரத் திருப்பதிகங்களின் தொகுப்பு. தருமபுர ஆதீனத் தமிழ்ப் புலவரும் சைவசித்தாந்தச் செம்மலுமாகிய சைவத்திருவாளர் காஞ்சிபுரம் க.வச்சிரவேலு முதலியார் எழுதிய உரையும், வண்ணை-நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியர் வித்துவானும் பண்டிதமணியுமாகிய ந.சுப்பையபிள்ளை எழுதிய உரைக் குறிப்பும் கொண்டு வெளிவந்துள்ள இந்நூல், யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தின் இரண்டாவது வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2984).