வை.அநவரதவிநாயகமூர்த்தி. கொழும்பு 2: இந்து மன்றம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்).
(13), 62 பக்கம், தகடு, விலை: ரூபா 4.00, அளவு: 18.5×12.5 சமீ.
திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட முருகப்பெருமான் தொடர்பான பல்வேறு ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. துதிப்பாடல்கள், முருகனும் முருகாற்றுப்படையும், பரங்குன்றில் பன்னிருகைக் கோமான், செந்தி முதல்வன், பக்தர்கள் போற்றிப் பரவும் பழநிமலை முருகன், தந்தைக்கு உபதேசம் செய்த தனயன், குன்றுதோறும் குடியிருக்கும் குமரன், பழமுதிர்ச் சோலை மலை கிழவோன், திருமுருகாற்றுப்படை, தனி வெண்பாக்கள், அருட்கவிஞர் நக்கீரர் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 204952).