கவிஞர் துரையர் (இயற்பெயர்: சு.துரைசிங்கம்). சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118, ஸ்டேஷன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2006, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).
viii, 24 பக்கம், விலை: ரூபா 33.00, அளவு: 19×13.5 சமீ.
முகவுரை, அணிந்துரைகளைத் தொடர்ந்து சிறப்புப் பாயிரம், விநாயகர் துதி, பல்லவி நீ தந்தாய், மயிலேறி வருவாய், என்றும் அருள்பவனே, திருக்கோலக் காட்சி, அருள்வாய் மகாமாரி, அப்பனுக்கு உரைத்தவா, அழகா வேலா, சூழும் வினை அகற்றிடுவாய், குறிஞ்சிக் குமரனே, பண் சுமக்கும் மக்களை, வீரம் கண்டேன், சுன்னையைக் காத்திடும் முழுக்கு, வேலனின் தோற்றம், சந்நிதியில் திருக்கூட்டம், உற்றதுணைக்கு ஒரு முருகா, சப்பர விழா, வரிசப்புல நாயகியே, கந்தசட்டி விழா, உன்னுலாக் காட்சி, விருந்தளிக்கும் ஐயனார், துயிலெழுப்பும் மணியோசை, அழகென்னே, ஆகிய 26 தலைப்புகளில் இறைவனை வாழ்த்தும் நோக்கில் எழுதப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பு. கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் துரையர் 16 வயதில் வீரகேசரியில் எழுதிய கவிதையுடன் இலக்கியப் பிரவேசம் செய்தவர். விவேகி, வலம்புரி, ஈழநாடு போன்ற இதழ்களில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன.