ஞானமணியம். மட்டக்களப்பு: கவிஞர் ஞானமணியம், திருப்பதி, குருக்கள்மடம், 1வது பதிப்பு, மே 1997. (லண்டன்: ஐயனார் அச்சகம்).
xiv, 345 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
இலங்கையில் உள்ள சைவத்தலங்கள் பற்றியதாக, குறிப்பாக கிழக்கிலங்கையில் உள்ள பல்வேறு சைவத்தலங்களை அதிகமாக உள்ளடக்கியதாக இவ்வரிய பாடல் தொகுப்பு அமைந்துள்ளது. சைவத்தலங்கள் பற்றிய தல வரலாற்றுக் குறிப்புகளை ஆங்காங்கே உள்ளடக்கி, அக்கோயில்களில் உறைந்திருக்கும் மூலதெய்வங்களின்மேற் பக்திமேலீட்டால் போற்றிப் பாடப்பெற்ற வாழ்த்துக்களாகவும் இவை அமைந்துள்ளன.