க.இராமச்சந்திரன். கொழும்பு: வேலுப்பிள்ளை உமாபதி ஞாபகார்த்த வெளியீடு, கொழும்பு சத் சங்கம், 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம்).
50 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
திருவள்ளுவர், ஸ்ரீ இராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், யோகர் சுவாமிகள், ஸ்ரீ ரமணதேவர், சுவாமி இராமதாசர், சுவாமி சிவானந்தர், அன்னை கிருஷ்ணாபாய் ஆகியோருக்கான அர்ச்சனை மாலைகளின் தொகுப்பு. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வர்ச்சனை மாலைகளை ஆக்கியோனின் 77ஆவது அகவையில் நூல்வடிவில் கொண்டுவந்துள்ளனர். இவ்வர்ச்சனை மாலைகளில் குறித்த பெரியார்களின் வரலாற்றுச் சுருக்கமும் உபதேசங்களின் சாரமும் எளிமையான இனிய நடையில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118670).