10175 முரசுமோட்டை ஸ்ரீ சுப்பிரமணியர் புராணம் என்னும் கந்தகோட்ட மான்மியம்.

கண்டாவளைக் கவிராயர் (இயற்பெயர்: சி.கு.இராசையா). வவுனியா: அகில இலங்கை சேக்கிழார் மன்றம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (வவுனியா: விசாலா பதிப்பகம், கண்டி வீதி).

xviii, 181 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

கடவுள் வாழ்த்து, ஈழவளச் சருக்கம், கரைச்சி நகர்ச் சருக்கம், கனகராயன் ஆற்றுச் சருக்கம், இரணைமடுச் சருக்கம், கந்தகோட்டச் சருக்கம், குடியேற்று சருக்கம், சிகண்டி முனிவர் சருக்கம், கந்தவன்னி கதிபெறு சருக்கம், கோயில்காண் சருக்கம், விழாவயர் சருக்கம் ஆகிய அத்தியாயங்களில் இச்செய்யுள்கள் ஆக்கப்பட்டுள்ளன. கரைச்சிப் பிரதேசத்தில் உள்ள கண்டாவளையில் 15.05.1928இல் பிறந்தவர் சித்தர் குமாரவேலு இராசையா என்னும் கண்டாவளைக் கவிராயர். விவசாயத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் 1956 முதல் முரசுமோட்டைக் கிராம அதிகாரியாக நியமனம் பெற்று 30 ஆண்டுகள் முரசுமோட்டையிலும் கிளிநொச்சியிலும் சேவையாற்றி இளைப்பாறினார். 2000ஆம் ஆண்டு கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் அரச இலக்கிய விழாவின்போது இந்நூலுக்கு 1999ஆம் ஆண்டுக்கான கவிதைத் துறையில் அரச இலக்கிய விருது வழங்கப்பட்டது. 1986ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் வைபவத்தில் கவிமணி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

ஏனைய பதிவுகள்