மருதூர் ஏ.மஜீத் (தொகுப்பாசிரியர்). கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (கல்முனை: எவர்ஷைன் அச்சகம், சாய்ந்தமருது 6).
188 பக்கம், விலை: ரூபா 57., அளவு: 17.5×12.5 சமீ.
மகாத்மா காந்தி, இராணி விக்டோரியா, அறிஞர் பேர்னாட் ஷா, ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர், பேர்ட்டன் ரசல், இங்கர்சால், அறிஞர் அண்ணா, மகாகவி பாரதியார், ஈ.வே.ரா. பெரியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், லியோ டால்ஸ்டாய், சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 100 முஸ்லீம் அல்லாத பிரமுகர்கள் இஸ்லாம் மதத்தைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அழகுறத் தொகுத்து இந்நூலை ஆசிரியர் வழங்கியுள்ளார். மேலும், உபநிடத சிந்தனைகளிலும், பஹலவி மொழிக் கிரந்தத்திலும், பவிஷ்ஷ புராணத்திலும், அதர்வ வேதத்திலும், பகவத் கீதையிலும், பைபிள்- சுவிசேஷங்களிலும், ஷாஹில் மவாஹிபு என்னும் கிரந்தத்திலும் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் தொடர்பான எதிர்வுகூறல்களையும் மேலதிகமாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13139).