M.T.M. ஸாஹிர். மாவனல்லை: ஸாஹிர் பதிப்பகம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (மாவனல்லை: யுனிக் ஓப்ஸெட் பிரின்டர்ஸ்).
vii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0260-10-2.
மனித சகவாழ்வுக்கு இஸ்லாம் எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை விளக்கும் நூல். பன்மைத்துவ சமுதாயத்தில் வாழ்ந்துவரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சந்திக்கும் இன-மத ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இக்காலத்தில் சகவாழ்வு பற்றிய சில புரிதல்களை இந்நூல் குர்ஆன், சுன்னா ஆதாரங்களுடன் வாசகர்களுக்கு வழங்குகின்றது. மனித சகவாசம், ஆரம்ப காலப் பகுதியில் இஸ்லாம் கையாண்ட பிரச்சார முறைகள், அறிஞர்கள்தான் இஸ்லாமிய சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற பொறுப்புதாரிகள், பௌத்த தீவிரவாதிகள் எம்மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகள், இஸ்லாமிய சமூகத்திற்கு அல் குர் ஆன் வழங்குகின்ற தீர்வுகள் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.