10182 சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம்: அலிமா முலையூட்டு படலம்.

பிறையாளன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).

80 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

17ம் நூற்றாண்டில்  தமிழகத்தைச் சேர்ந்த உமறுப் புலவரால் பாடப்பட்டது சீறாப்புராணமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றைக்கூறும் இக்காவியம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜுறத்துக் காண்டம் என்று மூன்று காண்டங்களைக் கொண்டது. விலாதத்துக் காண்டம் நபிநாயகத்தின் (ஸல்) இளமை வரலாற்றைக் கூறுகின்றது. விலாதத் என்ற அரபுச் சொல்லின் கருத்து பிறப்பு என்பதாகும். நாட்டுப் படலம் முதல் கஃபத்துல்லா வரலாற்றுப் படலம் ஈறாகவுள்ள விலாதத்துக் காண்டத்தில் உள்ள 25 படலங்களில் நான்காவது படலம் அலிமா முலையூட்டு படலமாகும். இப்படலத்தின் ஒவ்வொரு செய்யுளையும் தந்து அதற்கான பதவுரை,விளக்கம் என்பவற்றை மாணவர்கள் எளிதில் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இந்நூலை உருவாக்கியுள்ளார். 1971ம் ஆண்டிலிருந்து க.பொ.த. கலை- உயர்தரம் தமிழ்ப் பரீட்சைக்குப் பாடநூலாகப் பயிலப்பட்டது இந்நூலாகும். சீறத் என்ற அரபுச்சொல்லின் அர்த்தம் வரலாறு என்பதாகும். அதன்வழி மருவியதே சீறா என்பர். புராணம் என்பது தொல்கதையைக் குறிக்கும். சீறாப் புராணம் என்பதன் அர்த்தத்தை  வரலாறாகிய தொல்கதை எனக்கொள்ளலாம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31799).

ஏனைய பதிவுகள்