காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: காத்தான்குடி பௌஸ், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்ல).
85 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ.
முப்பது நோன்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பத்து நாட்கள் இறைவனின் இனிய ரஹ்மத்தை வேண்டி நிற்கிறது. இரண்டாம் பத்து மஃபிறத் என்னும் பாவமன்னிப்பையும், மூன்றம் பத்து இயலில் நரக விடுதலையையும் நாடி நிற்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54833).