10187 மறுவிலாதெழுந்த முழுமதி மாநபி.

எம்.மதனி இஸ்மாயில் (ஆங்கில மூலம்),  யூ.எல்.தாவூத் (மொழிபெயர்ப்பாளர்). கொழும்பு 12: ஸபீனா பதிப்பகம், 20, பிரைஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1964. (கொழும்பு 12: ஸபினா அச்சகம்).

(5), 47 பக்கம். விலை: ரூபா 1., அளவு: 17×11.5 சமீ.

கி.பி. 571ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி மக்காவில் அவதரித்தவர் முகம்மது நபி. தான் பிறப்பதற்கு முன்னரே தந்தையை இழந்தவர். தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்தவர். பெரியதந்தையாரான அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அவரது மறைவின் பின்னர் சிறிய தந்தையாரான அபுதாலிப் அவர்களாலும் பாதுகாத்து வளர்க்கப்பட்டவர். முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எளிய முறையில் விளக்குகின்றது.  ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூ.எல்.தாவூத், கவிதை, இலக்கியம், இஸ்லாம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். இஸ்லாம்-இஸ்லாமிய இலக்கியம் பற்றிய இவரது கட்டுரைகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87295). 

ஏனைய பதிவுகள்

13276 மானுடம் சமூகவியல் ஏடு 2: 1998/1999.

ஜீ.பகீரதி (ஆசிரியர்), ய.அனுஷா, ம.துஷ்யந்தன் (துணை ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

13659 கூடல் (பரல் 7): கண்ணகி கலை இலக்கிய விழா மலர் 2018.

கதிரவன் த.இன்பராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45A, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 112 பக்கம், புகைப்படங்கள்,