எச்.எம்.பல்யூஸி (மூலம்), நவாலியூர் சோ.நடராஜன் (தமிழாக்கம்). சென்னை 600017: Tamil Baha’i Publications Committee of Baha’i Publishing Trust, Baha’I Centre, இல. 8, சாரங்கபாணி தெரு, தியாகராஜ நகர், 1வது பதிப்பு, நவம்பர் 1977. (சென்னை 600017: பாலமுருகன் பிரின்டர்ஸ், பாண்டிபஜார்).
(4), 176 பக்கம், விலை: ரூபா 1., அளவு: 20×14 சமீ.
கடவுளின் ஒளியென்ற அர்த்தத்தைக் கொண்ட ‘பஹவுல்லா’ வென்று அறியப்பெற்ற மிர்ஸா ஹூசேன் அலி, பாரசீகத்தின் தலைநகரான தெஹிரானில் 1817ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி பிறந்தவர். இவரது தந்தை மிர்ஸா பசூர்க் பாரசிக மன்னர் ஷாவின் மந்திரிசபையில் பொறுப்பான பதவி வகித்தவர். பிரபுக்கள் வம்சத்தில் தோன்றிய போதிலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அவரது இளவயதைக் கழித்தவர். பஹாய் மதத்தின் தாபகர்களுள் ஒருவரான அவரது வாழ்க்கை வரலாறு இந்நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. ‘வாக்கு தூல வடிவு பெற்றது’ என்ற இறைவன் அவதாரம் பற்றிய கட்டுரையுடன் கூடிய நூல்.