பஹவுல்லா, அப்துல் பஹா (மூல ஆசிரியர்கள்), சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு)
54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.6 சமீ.
1817இல் பாரசீகத்தின், தெஹ்ரானில் பிறந்த பஹாய் மதத்தவரான பஹவுல்லா, அவரது மகன் அப்துல் பஹா ஆகியோரின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட அருள்நெறி தத்தவசாரங்கள் இவை. இவை சர்வசித்தாந்த அடிப்படையில் மனித இயற்கையை ஆராய்கின்றது. வித்தியாரத்தினம் நவாலியூர் சோ.நடராஜனால் தமிழாக்கம் செய்யப்பெற்றுள்ளது. இலங்கை பஹாய்களின் தேசிய ஆத்மீக சபையின் முன்னைநாள் செயலாளரும் உள்ளுர் ஆத்மீக சபைகளின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவருமான அமரர் வெற்றிவேலு சித்திரவேல் அவர்களை நினைவுகூர்ந்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11765).