செ.அன்புராசா. யாழ்ப்பாணம்: யாழ்.அமலமரி தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165, வேம்படி வீதி).
xxiv, 228 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1769-05-5.
மன்னாரிலிருந்து வெளிவரும் ‘மன்னா’ இதழ்களில் பிரசுரமான 33 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சமூகம், அரசியல், புலம்பெயர் வாழ்வு சார்ந்தவை. நேரம் தவறாமை, மேடைப் பேச்சாளர் அதிக நேரத்தை விழுங்குவது, அலைபேசியில் கதைத்தவாறு வாகனத்தை ஓட்டிச் செல்வதால் ஏற்படக்கூடிய வீதி விபத்துக்கள், கனவுலகில் மிதக்கும் இளந்தலைமுறையினரின் இயல்புகள், இன்றைய இளைஞர்களின் காதல் மோகம், ஆகிய விடயங்களோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள், அரசியல் சார்ந்த விடயங்கள், புலம்பெயர் வாழ்வின் மோகம், வாசிப்புத் துறையில் நாட்டமின்மை போன்ற விடயங்கள் இலகு தமிழில் தரப்பட்டுள்ளன. செ.அன்புராசா அ.ம.தி. அடிகளார், யாழ்ப்பாணம் மருத்துவமனை ஆன்மகுருவாகவும், மறையுரைஞராகவும், பிரான்ஸ் லூர்து திருத்தல ஆன்ம குருவாகவும் பணியாற்றியவர். தற்போது குருமட மாணவர்களின் உருவாக்குநராக பணிபுரிகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இலக்கியத் துறையில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் இவர், இத்துறையில் 8 நூல்களையும் 5 இறுவெட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.