சிவலிங்கம் சதீஷ்குமார். கொழும்பு 10: சிவலிங்கம் சதீஷ்குமார், 175/33/1/2, ஊநவெசயட ஆழரடயயெ புயசனநn, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 330 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-42116-4-3.
சிவலிங்கம் சதீஷ்குமார் இரத்தினபுரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகம் தொடர்பான முதுமாணிப்பட்டம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டவர். இலங்கையில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், முஸ்லிம்களின் ஒரு பகுதியினர், கிறிஸ்தவத் தமிழர்கள், பரதவர்கள் என்போரும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய இனச் சமூகத்தாரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினராவர். இவர்கள் இந்திய நாட்டுடன் கொண்டுள்ள தொடர்புகளையும் பிரதானமாக மலையகத் தமிழ் மக்கள் கொண்டுள்ள பற்றையும் அரசியல், சமூக, கலாசார ரீதியான தொடர்புகளையும் விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தமிழர் தரப்பு நியாயங்களையும் எடுத்துரைக்கின்றார். உலகில் ஆதி மனிதர்களான நாகர்கள் என்ற கட்டுரையில் தொடங்கி மோடியின் வருகையும் துளிர்விடும் நம்பிக்கைகளும் என்ற கட்டுரை ஈறாக 60 தலைப்புகளில் இந்நூலின் ஆக்கங்கள் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.