பதியத்தளாவ: பதியத்தளாவ பாரூக், கவியகம், 104, பிரதான வீதி, பதியத்தளாவ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (காத்தான்குடி: டொட்லைன் ஓப்செட் பிரிண்டர்ஸ், பிரதான வீதி).
36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52920-3-0.
இந்நூலில் 500 கருத்துரைகள் அடங்கியுள்ளன. அவை சிந்தனையைத் தூண்டும் அற்புத மணிகளாக அமைந்துள்ளன. சமுதாயத் தெருவில் சந்தித்துக்கொண்ட பலதரப்பட்ட சமூக முகங்களின் அழுக்குகள், அவலங்கள், கண்டு நின்ற கசப்புகள், உணர்வுகளின் உடன்பாடுகள், ஆசிரியர் அனுபவித்தவைகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றின் பதிவுகள் இவை எனக் குறிப்பிடுகிறார். 1967இல் பிறந்தவர் கவிஞர் பதியதளாவை பாறூக்.