10198 போலி முகங்கள்.

வி.எஸ்.சிவகரன். மன்னார்: விசித்திரன் வெளியீட்டகம், மூர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (வவுனியா: ஆகாஷ் கிராப்பிக்ஸ்).

iv, 56 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-52601-0-7.

சமூகச் சந்தையில் மனிதர்கள் தமக்குச் சாதகமாகப் பல வேஷங்களைப் போடுகிறார்கள். நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், மெல்லிதயம் கொண்டவர்களாகவும் வேஷமிடும் எம்மில்தான் எத்தனை வகைகள். கடவுள் மீண்டும் பூமிக்கு வந்தால் மனித இனத்தையே அழித்துவிடுவாரோ என்றெல்லாம் ஆசிரியர் இந்நூலில் பயப்படுகின்றார்.

நூலாசிரியர் மன்னார் இலுப்பைக் கடவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அனுபவமும் அறிமுகமும் என்ற நூலை 2005இல் வெளியிட்ட இவரது இரண்டாவது நூல் இதுவாகும். எமது சமூகத்திலுள்ள புல்லுருவிகளையும் சமூக விரோதிகளையும் தன் பேனாமுனையால் சாடுகின்றார். பள்ளியில் பாடம் போதிக்காது டியுசனுக்கு அழைக்கும் ஆசிரியர்கள், பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கும் அதிபர், மொட்டைக்கடிதம் எழுதி அப்பாவிப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் பிரகிருதிகள் என்று பலரது போலிமுகங்கள் கிழித்தெறியப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 210503).  

ஏனைய பதிவுகள்