சி.தில்லைநாதன். மட்டக்களப்பு: கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
(4), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை-2, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களால் 23.8.1992 அன்று நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையின் நூல்வடிவம் இதுவாகும். கிழக்கு மாகாணம் தந்த உலகின் முதலாவது தமிழ்ப் பேராசிரியரும் அண்ணாமலை, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் முத்தமிழ் வித்தகரும், யாழ் நூலுடன் மதங்கசூளாமணி முதலான அரிய நூல்களை வழங்கியவருமான சுவாமி விபுலாநந்தரின் பெயரில் ஏற்பாடுசெய்யப்படும் இந்நினைவுப் பேருரை புளியந்தீவு கிராமோதய சபையின் அனுசரணையுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13261).