நா.கணேசன் (இயற்பெயர்: நா.கணேசபிள்ளை). கனடா: ஜெயபாரதி அறக்கட்டளை, 33-42, Pinery Trail, Scarborough, Ontario, MIB 6H9, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 10: குமரன் அச்சகம், B3-G3. ரம்யா பிளேஸ்).
xv, 35 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
தன்னைப் பாதித்த சில சம்பவங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் பெற்றோருக்குத் தம் பிள்ளைகளுக்கு தாயகம், மொழி, பாரம்பரியம் பற்றிய எத்தகைய அறிவினையும் தெரிதல்களையும் வழங்கவேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. தாய்மொழியைப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் நாமே அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதையும், எமது தாயகத்தில் இன்று என்ன நடக்கின்றது என்ற தேடலையும் அவர்கள் தாமே பெற்றுக்கொள்ள வழியமைக்கவேண்டும். வாழ்வின் முக்கிய பொழுதுகளில் அவர்கள் சுயமாக முடிவகளை எடுப்பதற்கு ஏதுவாக பொறுப்புடன் வழிவிட்டு ஒதுங்குதல் வேண்டும். வேற்றுமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், வரலாறு என்பவற்றை உலக மொழிகளில் எழுதித் தெரியவைக்கவேண்டும் என்பன போன்ற பல ஆலோசனைகளை இக்கட்டுரைகள் வழங்குகின்றன.