இ.சங்கர். யாழ்ப்பாணம்: இ.சங்கர், சுழிபுரம் மத்தி, சுழிபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
xiv, 44 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
பம்பாயிலிருந்து மாதம் இருமுறை பிரசுரமாகிய லிங்க் (Link) என்ற அரசியல் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் ‘ராஷ்டிரபதி பவன்’ பற்றிய ஒரு சிறப்புக்கட்டுரை வெளிவந்திருந்தது. அது இ.சங்கர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1969இல் எம்.ஏ.ரஹ்மானின் இளம்பிறை இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகியிருந்தது. அக்கட்டுரையின் நூல்வடிவமே இந்நூலாகும். இந்திய அரசியல் பற்றியும் இந்திய தேசிய காங்கிரஸ் பற்றியும் ராஷ்டிரபதி பவன் விரிவாகப் பேசுகின்றது. 1963களில் சுதந்திரன் பத்தரிகையில் வாராந்தம் ஏழாம் பக்கத்தில், தொடர்ச்சியாக பூங்குன்றன் என்ற புனைபெயரில் அரசியல் கருத்து விமர்சனக் கட்டுரைகளை எழுதிவந்தவர் இ.சங்கர். இலங்கை வரலாற்றையும், அரசியலையும் தீர்க்கமாகப் புரிந்துகொண்டவர் இவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 197150).