10220 ஐக்கிய இராச்சியத்திற்கான விசா நடைமுறை.

தங்கவேலு ஜெயக்குமார் (ஆசிரியர்), கிருஷ்ணசாமி ஹரேந்திரன் (பதிப்பாசிரியர்). பிலியந்தலை: ஜே.கே. பப்ளிக்கேஷன்ஸ், 240/1V, ரட்டதெல்கஹவத்த, குடமாதுவ, சித்தமுல்ல, பிலியந்தலை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (பொரலஸ்கமுவ: டல்சோ ஓப்செட், இல. 152, கொழும்பு வீதி, பெப்பிலியான).

95 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-50370-2-0.

சிங்கள மொழியில் பரவலாக சட்டநூல்களை எழுதிவரும் தங்கவேலு ஜெயக்குமார் சிரச வானொலிச் சேவையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுபவர். 1986இல் மித்திரனில் வெளிவந்த ‘வாசமில்லா மலர்’ என்ற தொடர்கதையின் ஆசிரியரும் (கொஸ்லாந்தை குமார்) இவரே. இலங்கையிலிருந்து கல்வி, வேலை வாய்ப்பு, நிரந்தர வதிவிட உரிமை ஆகியவற்றைப் பெற முனையும் இலங்கையர்களுக்கு பிரித்தானியாவின் சிக்கலான விசா நடைமுறைகளை இந்நூலில்  ஆசிரியர் விளக்கியிருக்கிறார். விசா என்றால் என்ன, கல்வி, விடுமுறையின் கீழ் வேலை செய்தல், குடும்ப அங்கத்தவர்கள், கணவன் அல்லது மனைவி மரணமடைந்தால், திருமணம் முறிவடைதல், திருமண எதிர்பார்ப்பில் ஐக்கிய இராச்சியத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கோருதல், திருமணமாகாத துணை, பிள்ளைகள், பிள்ளைகளைத் தத்தெடுத்தல், சுற்றுலாப் பயணிகள், பராமரிப்போர், வேறு நாட்டுக்குச் செல்லும் வழியில், வைத்திய சிகிச்சைகளுக்காகச் செல்பவர்கள், பாடசாலை செல்லும் பிள்ளையின் பெற்றோர் என்ற அடிப்படையில், பயிலுநர் தாதிகள், அனுமதியுடன் கூடிய தொழில்வாய்ப்பு, ஐக்கிய இராச்சியத்தில் வதியும் பிள்ளையொன்றை பார்வையிடுவதற்காக வருகைதரல், மதத்தைப் பரப்புவதற்காக மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் உரையாற்றுவதற்காக பயணிப்போர், வெளிநாட்டு ஊடகப் பிரதிநிதிகள், வெளிநாட்டு அரசாங்கப் பணியாளர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள், ஐக்கிய இராச்சியத்தில் கிளைகளற்ற இலங்கை நிறுவனங்களின் பிரதிநிதிகள், மேன்முறையீடு, அரசியல் புகலிடம் ஆகிய 25 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்