செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி வெளியீட்டகம், 196/23 தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: யாழ். பதிப்பகம், நல்லூர்).
x, 140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-42064-0-3.
இந்நூல் இலங்கை மற்றும் சர்வதேசத்தின் கடந்த காலத்தில் முக்கியத்துவம் பெற்றதும் தற்காலத்துடன் தொடர்புபட்டதுமான பல்வேறு அரசியல் பொருளாதார விடயங்களைப் பேசுகின்றது. இலங்கையில் பாதுகாப்பு செலவீனமும் பொருளாதார வளர்ச்சியும், இலங்கையில் உள்நாட்டு முரண்பாடுகளும் பொருளாதார அபிவிருத்தி திட்டமிடலும், அமெரிக்க பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்கள், இலங்கையில் உள்நாட்டுப் போரும் பொருளாதாரப் பின்னடைவும், பொருளாதாரமும் வணிக விடயங்களும், இலங்கையில் நிதிச் சந்தையின் தாராளமயமாக்கலும் சவால்களும், மாற்றமடைந்துவரும் உலக அரசியல், பொருளாதார சூழலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதன் தாக்கமும், பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கத்தின் பங்கு, இலங்கையில் தனியார்மயமாக்கமும் உள்நாட்டு யுத்தமும், இலங்கையில் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கான காரணிகள், இலங்கையின் 2015 ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டமும் பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய 12 பொருளியல்சார் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001420).