10224 அரசியல் பொருளாதாரக் கட்டுரைகள்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி வெளியீட்டகம், 196/23 தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: யாழ். பிரின்டர்ஸ், நல்லூர்).

x, 164 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44890-9-7.

இந்நூல் மூன்று பகுதிகளில் ஆசிரியர் எழுதிய ஒன்பது பொருளாதாரக் கட்டுரைகளைக் கொண்டது. வடக்கு கிழக்கு பொருளாதாரம் என்ற முதலாவது பகுதியில் அதிகாரப் பரவலாக்கமும் வடமாகாண பொருளாதார அபிவிருத்தியும், வடமாகாண விவசாய அபிவிருத்தி வாய்ப்புக்களும் சவால்களும், வட மாகாண சபையின் ஒரு வருடகால பொருளாதார அபிவிருத்தி அரசியல் பொருளாதார நோக்கு ஆகிய மூன்று கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியாகிய இலங்கைப் பொருளாதாரம் என்ற பிரிவில் இலங்கையின் பணச்சந்தை, இலங்கையின் வறுமை ஒழிப்பும் புதிய தந்திரோபாயமும், இலங்கையின் நாணயப் பெறுமதி இறக்கமும் பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய மூன்று கட்டுரைகள் உள்ளன. இறுதிப் பகுதியாகிய உலகப் பொருளாதாரம் என்ற பிரிவில் உலக மயமாக்கமும் பொருளாதார சமமின்மைகளும், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (IBRD) மீதான விமர்சன நோக்கு, பொருளியலில் கணிதத்தின் பிரயோகங்கள் ஆகிய மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001421). 

ஏனைய பதிவுகள்