10226 ஆசியாவின் அபிவிருத்தி யதார்த்தங்கள்.

செ.சந்திரசேகரம் (பதிப்பாசிரியர்), ஏ.வி.மணிவாசகர் (ஆலோசனை பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அபி வெளியீட்டகம், 196/23 தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 12: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 71, ஓல்ட் மூர் வீதி).

xvi, 253 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 1000., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44890-7-3.

தென் கிழக்கு ஆசியாவின் பொருளாதார அபிவிருத்தி மூலங்களும் இலங்கையின் அனுபவங்களும், தென் கொரியாவின் பொருளாதார முன்னேற்றம்: கைத்தொழில் கொள்கை மற்றும் பொருளாதார ஜனநாயகம் மீதான ஒரு நோக்கு, தேசியப் பொருளாதாரங்களின் பசுமைப் பொருளாதார வளர்ச்சி நோக்கியதான நகர்வும் மெய்வளர்ச்சிக் குறிகாட்டிக் கணிப்பீடும், தென்கிழக்காசிய நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடும் அவற்றின் போக்குகளும், பிராந்தியவாதமும் பூகோளவியல்வாதமும்: கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதார வெற்றிக்குப் பங்களித்த வர்த்தக முறைமை பற்றிய ஒரு மதிப்பீடு, பால்நிலை சமத்துவமும் பொருளாதார வளர்ச்சியும்: ஆசியாவின் சில அனுபவங்கள், தென்கிழக்கு ஆசியாவின் நிதி நெருக்கடி ஆகிய ஏழு  தமிழ்க் கட்டுரைகளுடன் E-enabled Service Delivery: Indian Reality at  Local Development, Cutting Edge Nationalism: Contemporary Crisis of South Asian Political Economy, Decentralized Government in the Developmental context of India ஆகிய மூன்று ஆங்கிலக் கட்டுரைகளுமாக மொத்தம் 10 ஆய்வுக் கட்டுரைகள் இந்நுலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001418). 

ஏனைய பதிவுகள்

16663 சமம் உருவகக் கதைகள்.

செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 607, பார் வீதி, 1வது பதிப்பு, ஜ{ன் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  x, 70 பக்கம், ஒளிப்படங்கள்,