செல்வரத்தினம் சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், 196/23, தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
x, 149 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44890-2-4.
இந்நூலின் ஆசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றும் கலாநிதி செ.சந்திரசேகரம் அவர்களாவார். இந்நூலின் முற்பகுதி பட்டதாரிகளை வெள்ளை ஆடைத் தொழில்களில் (White Color Jobs) இருந்து தொழில் முயற்சியாண்மையை நோக்கி மாற்றுவதற்குத் தேவையான உளப்படிவு மாற்றங்களைப் பற்றி எடுத்துக் கூறுகின்றது. ஏனைய பகுதிகளில் தொழில் முயற்சியாண்மை பற்றியும் அவற்றின் படிநிலைகள், பண்புகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். இலங்கையில் உயர்கல்வித் தகைமைகளும் வேலை வாய்ப்புச் சவால்களும், இலங்கையின் உயர்கல்வியும் முயற்சியாண்மையும், முயற்சியாண்மையின் பண்புகள், முயற்சியாண்மை அபிவிருத்தி செயன்முறை, முயற்சியாண்மையின் வெற்றிக்கான திறன்கள், பெண்களும் முயற்சியாண்மையும், முயற்சியாண்மை திட்ட வரைவும் சாத்திய அறிக்கையும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தொழில் முயற்சியாண்மை, தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியில் அரசின் பங்கு, முயற்சியாண்மை: ஓர் அனுபவ பகிர்வு ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001423).