சின்னத்துரை விஜயகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 220 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணை, விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-446-1.
பொருளாதார ஆய்வுமுறைகள், தேசிய கணக்கீடும் வருமான வட்டப் பாய்ச்சலும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்புப் பற்றிய பழம்பொருளியல் கோட்பாடு, வேலையின்மையும் சமனிலைத் தேசிய வருமான மட்டமும்: ஓர் மிகச் சிக்கலான மாதிரி, கெயின்சின் நுகர்வுத் தொழிற்பாடு, பெருக்கிக் கோட்பாடு, IS-LM மாதிரி: பேரினப் பொருளியலில் கெயின்சுக்கு பின்னான அபிவிருத்தி ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளியலில் காணப்படும் பல்வேறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கணித சமன்பாடுகள், கணியம்சார் உத்திகள், வரைபடங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி இலகுவான மொழிநடையில் விளக்கியுள்ளார். சி.விஜயகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் கற்று, முதுகலைமாணிப் பட்டத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தை செக் குடியரசின் தோமஸ்பாட்டா பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர்.