10230 பொருளியல் பகுதி 2: க.பொ.த. (உயர்தர)சனத்தொகை.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

66 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 120., அளவு: 20×14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பின் 2009ம் ஆண்டு பதிய பாடத்திட்டத்துக்கு ஏற்றவகையில் எழுதப்பட்ட நூல். சனத்தொகை, சனத்தொகை உறுதிப்பாடு, சனத்தொகை வளர்ச்சி வீதம், சனத்தொகை வெடிப்பு, குடியடர்த்தி, தங்கி வாழ்வோர் வீதம், சனத்தொகை முன்னீட்சி, சனத்தொகை எறியம், வினாக்கள், கற்றல் நுட்பங்கள், பரீட்சை நுட்பங்கள் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள இலங்கைசார்ந்த பொருளாதார தரவுகள் அனைத்தும் மத்திய வங்கி அறிக்கை, ஐம்பதாண்டு மத்திய வங்கியின் வெளியீடு, உலக வங்கியின் ஆய்வறிக்கை என்பவற்றிலிருந்து பெறப்பட்டதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48589).

ஏனைய பதிவுகள்

16176 பேரின்பப் பாதை.

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/யு, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 2019, 2வது பதிப்பு, டிசம்பர் 2015, 1வது பதிப்பு, மே 1976.