பவானி லோகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வறுமை ஆராய்ச்சி நிலையம், 1வது பதிப்பு, மார்ச் 2008. (ஹோமாகம: கருணாரட்ண அன் சன்ஸ் லிமிட்டெட், 67, UDA கைத்தொழிற் பேட்டை, கட்டுவான வீதி).
(4), 27 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-1040-42-0.
இவ்வாவணத் தொகுப்பானது வறுமையும், அது சார்ந்த சமூக பொருளாதார முரண்பாடுகளையும் தொடர்புபடுத்தும் நூல்வளங்களை இனம்காட்ட முற்படுகின்றது. இதில் கிராமிய, நகர்ப்புற வறுமை நிலைகள் ஆயுதப் போராளிகளினது பாதிப்பு என்பன பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சமூக குழுக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் சம்பந்தமாக விசேஷ தகவல்கள் நூல்வளக் குறிப்புகளாக இக்கைநூலில் தரப்பட்டுள்ளன. சர்வதேசப் பரிமாணம் (எண்ணக்கரு, வறுமை மற்றும் முரண்பாடுகளிலுள்ள சமூகங்கள், பால்நிலை/பெண்கள், சிறுவர்), இலங்கை( கிராம மற்றும் நகர்ப்புற வறுமை, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சமூகத்தில் இடருக்குட்படக்கூடிய பலவீனமான குழுக்கள் (பெண்கள், சிறுவர், இளைஞர்), உழைப்பு, தொழில் மற்றும் வாழ்வாதாரம், பெருந்தோடடத் தொழிலாளர்கள்) ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டதாக இச்சிறுநூல் அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218363).