10232அபிவிருத்தி வங்கியியல்.

பொன்.பாலகுமார். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி,  1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்,  இணுவில்).

xii, 67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ.

ஆசிரியரின் துறைசார் கட்டுரைத் தொகுதியில் கிராமக்கடன், வறுமை தணிப்பதற்கான கருவியாக நுண்நிதி அபிவிருத்தி வங்கியியலில் பங்கேற்பு, அபிவிருத்திச் செயன்முறைகள், சமூகவங்கியியல், சிறு கைத்தொழில் முயற்சிக்கான வங்கிக் கடன் வசதிகள், சமகால வங்கியியல், சாமான்னியர்க்கான வங்கியியல், அபிவிருத்தி வங்கியியலில் ஒரு புதிய பரிமாணம், ஏதிலிகளுக்கான கடன் திட்டம், விவசாயிகளுக்கான கடனட்டை வழங்குவது சாத்தியமானதா? ஆகிய பயன்மிக்க கட்டுரைகள் அடங்கியுள்ளன. இத்துறையில் ஆசிரியர் கொண்ட நீண்ட அனுபவத்தினூடாகவும், தேடல்களினூடாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது வங்கித் தொழிலில் புதிதாகக் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகின்றது. மற்றையது கிராமிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தமக்குத் தேவையான நிதியியல் ஆதாரத்தைப் பெறுவதற்கு வங்கிகள் நிதி நிறவனங்கள் போன்றவற்றிடம் ஆற்றுப்படுத்தும் தகவல்களை வழங்குவதாகவும் உள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55062).

ஏனைய பதிவுகள்