எஸ்.அமலநாதன். மட்டக்களப்பு: கலாநிதி எஸ்.அமலநாதன், 372/2, அரச விடுதி வீதி, கல்லடி, 2வது பதிப்பு, ஆடி 2013, 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 182 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-54712-0-6.
மட்டக்களப்பு, செட்டிபாளையத்தைச் சேர்ந்த கலாநிதி எஸ்.அமலநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றவர். கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளராகவும் உள்ளார். தனது துறைசார் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் 180க்கும் அதிகமான நிறுவனங்கள் சிறுகடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில், சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் மட்டும் 2000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் சிறுகடனாக வழங்கியுள்ளன. போதிய அறிவூட்டல்களை பொதுமக்கள் பெற்றிராத நிலையில் பெரும் நிதிச் சிக்கல்களுக்குள் அகப்பட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்நிலையில், சிறுகடன் பற்றிய எண்ணக்கரு, சிறுகடன் திட்டத்தின் வரலாறும் பின்னணியும், சிறுகடன் கொடுக்கல்-வாங்கல்களுக்கான அடிப்படைகள் மற்றும் மரபுசார் முறையியலின் பலவீனம், சிறுகடன் வழங்கும் ஸ்தாபனங்கள், பாரம்பரிய முறையில் காணப்படும் பலவீனங்கள், நோபல் பரிசை வென்ற கிறமின் மாதிரியின் சிறப்பியல்பு, சிறுமுதலீட்டை வெற்றிகொள்வதற்கான பரிந்துரைகள் எனப் பல்வேறு விடயங்களை இந்நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.