10236 பணம்-பணவீக்கம் மற்றும் உற்பத்தி.

ஹெச்.என்.தேநுவர (ஆங்கில மூலம்), க.பாலசுப்பிரமணியம் (தமிழாக்கம்). கொழும்பு: உலகளாவிய கொள்கை ஆராய்ச்சி நிலையம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை).

xiv, 238 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0404-02-5.

இந்நூலின் குறிக்கோள், நாடொன்றின் பணம், பணவீக்கம் மற்றும் உற்பத்தி என்பவற்றின் அடிப்படைகள், அவற்றிற்கிடையேயான தொடர்புகள், மற்றும் நாணய அதிகாரசபை, செலாவணி வீதம் மற்றும் நாணயக் கொள்கை அமைப்புகள் என்பவற்றினால் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதனை விளக்குவதேயாகும். பணம் மற்றும் நாணய அதிகார சபை, பணம் அச்சிடுதல், பண உருவாக்கம் மற்றும் பணவீக்க வரி, வட்டி வீதங்கள், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பணத்திற்கான கேள்வி, செலாவணி வீத அமைப்புகளும் செலாவணி வீதங்களும், பொருளாதார நெருக்கடிகளும் நாணய அதிகார சபையும், பணம், பணவீக்கம் மற்றும் உற்பத்தியில் உள்ளக செயற்பாடுகள், நாணயக் கொள்கை அமைப்புகள், நாணயக் கொள்கை மற்றும் நாணயத் தொழிற்பாடுகள், இறைக் கொள்கை, அரச நிதி மற்றும் அரச படுகடன், மத்திய வங்கியின் சுதந்திரம், எதிர்கால நாணயக் கொள்கையும் மத்திய வங்கித் தொழிலும் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐக்கிய அமெரிக்காவின் ஐயொவா பல்கலைக்கழகத்தில் பணம், வங்கித் தொழில் மற்றும் நிதியியல் சந்தைகள் தொடர்பான பொருளாதாரங்களில் கற்பித்த அனுபவம் மிக்கவர். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68451). 

ஏனைய பதிவுகள்