10238 தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும்: இலங்கையில் தேயிலைக் கைத்தொழில்-ஒரு சமூக பொருளாதார ஆய்வு.

மு. சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 224 பக்கம், புகைப்படங்கள், அட்டவணை, விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-456-0.

பெருந்தோட்ட விவசாய முறையின் தோற்றமும் அதில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், இலங்கையில் பெருந்தோட்டங்களின் ஆரம்பமும் வளர்ச்சியும், இலங்கையினது பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறையின் பங்கு, பெருந்தோட்டத்துறையில் அமைப்புசார்ந்த மாற்றங்கள், தேயிலைச் செய்கையில் உற்பத்திக் காரணிகளும் உற்பத்தித் திறனும், பெருந்தோட்டத்துறை வேதனங்கள்: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், தேயிலைத் தொழிலில் மிகை ஆக்கமும் அதன் பங்கீடும், பெருந்தோட்டக் குடியிருப்பாளரும் அவர்களுக்கான சமூகநலன் சேவைகளும், பெருந்தோட்ட தமிழ்ச் சமூகத்தின் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளும் அதன் அபிவிருத்தியும் ஆகிய ஒன்பது  ஆய்வுக்கட்டுரைகள இந்நூல் உள்ளடக்குகின்றது. பின்னிணைப்பாக இலங்கையில் சிற்றுடைமைத் தேயிலை உற்பத்தி என்ற கட்டுரை இடம்பெறுகின்றது. தேயிலைக் கைத்தொழில் தொடர்பான சகல விடயங்களையும் பற்றி நூலாசிரியர் இந்நூலில் ஆராய்ந்துள்ளார். தேயிலைக் கைத்தொழிலின் தோற்றம்,  வளர்ச்சி, இலங்கையின் பொருளாதாரத்தில் அதன் பங்கு, காலப்போக்கில் அத்தொழிலில் ஏற்பட்டுவந்துள்ள அமைப்புசார் மாற்றங்கள், தேயிலைச் செய்கைக்குக் கையாளப்படும் உற்பத்திக் காரணிகள், தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள், போன்ற பல்வேறு விடயங்கள் மேற்படி கட்டுரைகளில் ஆராயப்பட்டுள்ளன. பேராசிரியர் மு.சின்னத்தம்பி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் பொருளியல்துறையில் இளங்கலைமாணி, சிறப்புப் பட்டத்தினையும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்