10241 தமிழீழ ஒறுப்புச் சட்டம் (Penal Code of Tamileelam).

தமிழீழ நீதி நிர்வாகத்துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 222 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×16 சமீ.

1994ஆம் ஆண்டின் 04ஆம் எண் சட்டம். தமிழீழத்தில் இழைக்கப்படும் குற்றங்களை வெளிப்படுத்தவும் அவற்றிற்கான ஒறுப்புகளைத் தீர்மானிப்பதற்குமான சட்டமாக இது 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்திருந்தது. தமிழீழ மக்களுக்குச் சரியான முறையில் நீதி வழங்கும் முகமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பணிப்பரையின்பேரில் தமிழீழ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விரைவாகவும், எளிதாகவும், அதிக பொருட்செலவுமின்றி நீதி கிடைக்கக்கூடிய வகையில் உறுதிப்படுத்துவதாக பல சட்டமூலங்கள் இயற்றப்பட்டன. தமிழீழ தேசியத்தலைவர் தமிழீழத்தின் சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்காகவும் தமிழீழ மக்கள் நியாயத்தைப் பெறுவதற்காகவும் காலத்திற்குக் காலம் தேவையான சட்ட விதிகளை ஆக்கித் தமிழீழ நீதிமன்றத்தினூடாக நடைமுறைப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. நீதித்துறை நேரடியாக இயக்கத்தின் தலைவரின் கீழ் செயற்பட்டது. நீதித்துறையில் மாற்றங்கள் செய்தல், தண்டனைகளை மாற்றி அமைத்தல் என்பனவற்றைத் தலைவர் மட்டுமே மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 

ஏனைய பதிவுகள்

17364 ஆத்மீக உணர்வு ஆரோக்கிய வாழ்வு நல்கும் யோகக் கலை.

ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம், பருத்தித்துறை வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 1978, 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).