மு.திருநாவுக்கரசு. பிரித்தானியா: தமிழ் ஆய்வு மையம், 1வது பதிப்பு, வைகாசி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 118 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-43339-0-1.
இந்நூலின் முதலாவது பகுதி இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை விபரிக்கின்றது. இரண்டாவது பகுதி ஐந்து இயல்களைக் கொண்டது. புதிய உத்தேச அரசியல் யாப்பும் அது தொடர்பான அடிப்படைகளும், பிரித்தானிய நலனுக்கான புவிசார் அரசியல் அடிப்படையிலான டொனமூர், சோல்பரி, அரசியல் யாப்புக்களும் தமிழருக்கு எதிரான நிலைப்பாடுகளும், சிங்களத் தலைவர்கள் உருவாக்கிய அரசியல் யாப்புகள், புதிய உத்தேச யாப்பு, முடிவுரை ஆகிய தலைப்புகளில் இவ்வைந்து இயல்களும் எழுதப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக பூகோளவாதம்- புதிய தேசியவாதம்; என்ற தலைப்பில் வெளிவரவுள்ள ஆசிரியரின் புதிய நூல் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது. சுயாதீன ஆராய்ச்சியாளரான மு.திருநாவுக்கரசு சர்வதேச உறவுகள், உள்நாட்டு அரசியல், தேசியவாதம், இனப்பிரச்சினைகள், புவிசார் அரசியல், அரசியல் கோட்பாடுகள், மற்றும் வரலாறு என்பன சார்ந்து தனித்துவம் மிக்க பல நூல்களை எழுதியுள்ளார்.