அருணாசலம் இரவீந்திரன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி ரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 2வது பதிப்பு, 2013, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
vi, 156 பக்கம், விலை: ரூபா 430., அளவு: 26×19 சமீ.
அரச சேவை போட்டிப் பரீட்சைகள், வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள் என்பவற்றிற்கான வழிகாட்டி நூல். மூன்று பிரிவுகளைக்கொண்ட இந்நூலின் முதற்பிரிவு பகிரங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் தொகுப்பாகும். பகுதி 2, தாபன நடைமுறை விடயங்களின் தொகுப்பாகவும், பகுதி மூன்று, பல்தேர்வு வினா-விடை, சுருக்க வினா-விடை, கட்டமைப்பு வினா-விடை, சிறுகுறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காளராகப் பணயாற்றியவர். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64760).