10252 சுற்றாடல் அறிவுச்சுடர்: வினா-விடைத் தொகுப்பு.

சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு. பத்தரமுல்லை: பிரதிப் பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955- 9012-48-1.

சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் செயன்முறையில் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்விமான்களின் குழுவொன்றினால் உருவாக்கப்படடுள்ள இந்நூல் பாடசாலை பாடவிதானத்துக்கு அப்பால் சுற்றாடலின் பல்வேறு அம்சங்களையும் புரிந்துகொள்ள வழியமைத்துள்ளது. காடுகள், ஈர நிலங்கள், உயிர்ப் பல்வகைமை, நீர், நீர்வீழ்ச்சிகள், கண்டல் நிலம், இலங்கை குருவிகள், இலங்கை வண்ணத்துப் பூச்சிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், முருகைக் கற்பார்கள், சமுத்திர வளங்கள், நிலைபேறான அபிவிருத்தி, பாரம்பரிய அறிவு, இலங்கை ஞாபகார்த்த தாவரங்கள், வளி, அனர்த்த முகாமைத்துவம், நிலப்படியிறக்கம், மண்ணரிப்பு, கழிவுப்பொருள் முகாமைத்துவம், இலங்கை சுற்றாடல் சட்டங்கள் ஆகிய 20 தலைப்புகளின்கீழ் இந்நூல் மாணவர்களிடம் வினாக்களை எழுப்புவதுடன் அதற்கான விடைகளையும் வழங்குகின்றது. இந்நூலின் தயாரிப்பின் பொறுப்பாளராக சுஜீவா பெரேராவும் (சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் உத்தியோகத்தர்), தமிழில் ஒப்புநோக்கல் மற்றும் ஒருங்கிணைப்பாளராக என்.திருலோகசந்திரனும் (பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர்;) பங்களித்திருக்கின்றனர். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199542). 

ஏனைய பதிவுகள்

8 beste Paysafe Casinos 2024

Content Ghost Slider gratis spielen | Casino Online Google Play Paysafekarte / Paysafecard Anbieter abzüglich deutsche Lizenz Will man Einzahlungen auf sein Guthaben-Bankkonto unteilbar Online