செல்வம் கண்ணதாசன். யாழ்ப்பாணம்: செல்வம் கண்ணதாசன், பறாளாய் வீதி, சுழிபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், இல. 681, காங்கேசன்துறை வீதி).
xxiii, 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51696-1-5.
கற்றிடக் கற்றல், கற்றற் செயற்பாட்டில் ஞாபகசக்தியின் பங்கு, கற்றல் முறைகள், கற்றல் நுட்பங்கள், கற்பதற்கான நேரத்தைத் திட்டமிடல், க.பொ.த. உயர்தரத்தில் பாடத் தெரிவு, பரீட்சைகள், மன அழுத்தம், புத்தி சாதுரியம், இலக்கை அமைத்து வாழ்க்கையில் வெற்றிபெறக் கற்றல், பூரணமனிதனாய் வாழ்ந்திடக் கற்றல் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பூரண மனிதனாய் வாழ்வதற்கு எவ்வாறான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் எம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கான படிவம் ஒன்றும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. இந்நூலுக்கு வாழ்த்துரையை பேராசிரியர் க.சிவபாலனும், கலாநிதி அஜந்தா கேசவராஜ் அவர்களும், அணிந்துரையை பேராசிரியர் மா.சின்னத்தம்பி அவர்களும், விரிவானதொரு முகவுரையை உளமருத்துவ நிபுணர் சா.சிவயோகன் அவர்களும் வழங்கியுள்ளனர்.