10256 உலகளாவிய உயர்கல்வி முறையின் தற்கால செல்நெறிகளும் இலங்கையின் உயர்கல்வி முறைமையும்.

சோ.சந்திரசேகரன் (மூலம்), கே.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்).  தெகிவளை: கலாசூரி இ.சிவகுருநாதன் ஞாபகார்த்தக் குழு, இல.16/1, மல்வத்தை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

தினகரனில் சுமார் 34 வருடங்கள் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி மறைந்த காலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் நினைவுப்பேருரையாக நிகழ்த்தப்பட்ட சிறப்புரையின் நூல்வடிவம் இது. தேசிய கல்வி ஆணைக்குழு உறுப்பினராகப் பணியாற்றும் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பதுளை ஊவாக் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். தற்போது தேசிய கல்வி நிறுவகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்