10258 கட்டுருவாக்கவாதம்: கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறை.

சுப்பிரமணியம் பரமானந்தம். வவுனியா: சுபம் வெளியீடு, கோவில் வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

viii, 108 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 280., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-99402-1-0.

தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை வவுனியா மாவட்டப் பாடசாலைகளிலே கற்று, கணித விஞ்ஞான ஆசிரியராகத் தன் பணியை ஆரம்பித்து, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டத்தினைப் பெற்று பின் பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளோமாவிலும் சிறப்புச் சித்தியைப் பெற்றுக்கொண்டவர் சு.பரமானந்தம். இந்நூலாசிரியர் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளராவார். கட்டுருவாக்கவாதம்-அறிமுகம், கட்டுருவாக்கவாதத்தின் வளர்ச்சி, கட்டுருவாக்க மாதிரிகளும் வகைகளும், கட்டுருவாக்கவாத கற்றற்கோட்பாடு விருத்தியில் முக்கியத்துவம் பெற்றவர்கள், கட்டுருவாக்கவாத ஆசிரியர், 5E கற்பித்தல் முறை, கட்டுருவாக்கவாத வகுப்பறைச் செயற்பாடுகள், கட்டுருவாக்கவாத கற்பித்தல் நுட்பங்கள், கட்டுருவாக்கவாத செயன்முறைகளில் கணினியின் பங்களிப்பு, கட்டுருவாக்கவாத கற்றல் கற்பித்தல் கோலங்களில் மூளையின் செயற்பாடு, 5நு மாதிரி பாடக் குறிப்புகள், கட்டுருவாக்கவாதம் தொடர்பான எண்ணக்கரு வரைபடங்கள் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

கட்டுருவாக்கவாதம்: கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறை.

சுப்பிரமணியம் பரமானந்தம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

xiv, 198 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 660., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-685-155-7.

இவ்விரண்டாம் பதிப்பில் சாரம் கட்டுதல் (Scaffolding) கட்டுருவாக்கவாத அணுகுமுறை, பிரதிபலிப்பு கட்டுருவாக்கவாத அணுகுமுறை, கட்டுருவாக்க கற்றல் சூழலில் மேயரின் அணுகுமுறை ஆகிய மூன்று மேலதிகமான கட்டுரைகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 15 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15687 எதிரொலி-சிறுகதைத் தொகுப்பு.

மு.தயாளன்.  மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).  110 பக்கம், விலை: ரூபா 300.,