மா.செல்வராஜா. செங்கலடி: மா.செல்வராஜா, முதுநிலை விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்- இலங்கை, வந்தாறுமூலை, 3வது பதிப்பு, டிசம்பர் 2004, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
164 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 955-98684-1-1.
கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்: நவீன அணுகுமுறைகள்.
மா.செல்வராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park , 6வது பதிப்பு 2019, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2000, 3வது பதிப்பு, டிசம்பர் 2004, 4வது பதிப்பு, 2009, 5வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
xiv, 216பக்கம், விலை: ரூபா 760., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-685-038-3.
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. விடய ஆய்வுக்கு விடையளிக்கும் பல்வேறு அணுகுமுறைகள், விடய ஆய்வுகள், அவைகள் மீதான வினாக்கள், வினாக்களுக்கு விடையளிப்பதற்கு உதவியான மாதிரி விடைகள், குறிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கி வெளிவரும் இந்நூல் அதிபர்கள் சேவைப்பரீட்சை (SLPS), கல்வி நிர்வாக சேவைப் பரீட்சை (SLEAS) தடைதாண்டும் பரீட்சைகள்(EB), பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா புகுமுகத் தேர்வுகள் போன்றவற்றுக்கும் பயன்படுவதுடன் கல்வித்துறையில் பணிபுரிவோர் தம் முகாமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கும் பயன்படும். கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில் விடய ஆய்வுக்கு விடையளிப்பதற்கான அணுகுமுறைகள் பற்றிய குறிப்புக்கள் இரண்டாவதாகக் காணப்படுகின்றன. தொடர்ந்து பன்னிரு விடய ஆய்வுகள் தனித்தனி அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் கடந்தகால வினாப்பத்திர விடய ஆய்வுகள் மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114639).