10261 கல்வியும் இலக்கியமும்: கட்டுரைத் தொகுப்பு.

செ.அழகரெத்தினம். வவுனியா: தமிழ் மன்றம். தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2001. (வவுனியா: நிலம் வெளியீட்டகம், 87, வியாசர் வீதி, தோணிக்கல்).

iv, 122 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியான இந்நூல் ஆசிரியரின் கல்வியியல், இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆரம்பக் கல்வி ஆசிரியரின் பங்களிப்பு, சுவாமி விபுலாநந்தரும் பல்கலைக்கழகக் கல்வியும், விபுலாநந்த அடிகளின் கல்விச் செயன்முறைகள்-ஒரு கண்ணோட்டம், அன்னை மொழிக் கல்வி பற்றி விபுலாநந்த அடிகளார், கல்வியியற் கல்லூரியும் ஆசிரியர் கல்வியும், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதை இலக்கியம்-ஒரு கண்ணோட்டம், தேசியக் கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப்பாங்கு, பாரதியும் விபுலாநந்தரும், நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகள் சில, வித்தகர் வித்தி- ஒரு மீள்நோக்கு, இலங்கையின் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தர விருத்தி, பகவான் சத்யசாயி பாபாவின் கல்விக் கருத்துக்கள் ஒரு கண்ணோட்டம் ஆகிய 12 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்