ஏ.எஸ்.பாலசூரிய. மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xv, 502 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
பிள்ளைகள் வன்முறையற்ற சமாதானப் பிரியர்களாக வளர்ச்சி பெற அவசியமான அடிப்படை அறிவு, மனப்பாங்குகள், திறன்கள், ஆகியவற்றை அபரிமிதமாக வழங்கும் சிறந்த கற்றற் செயற்பாடுகள், ஆசிரியருக்கான ஆலோசனைகள் பலவற்றுடன் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. சிறார்களின் ஆளுமையை விருத்திசெய்யும் பாடநெறியாகவும், வகுப்பு முகாமைத்துவ வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்குகின்றது. பொதுவாக நோக்கும்போது பிள்ளைகளின் கற்றலை மேலும் அர்த்தமுள்ளதாகச் செய்யும் புதிய அணுகுமுறையொன்றினை இது அறிமுகம் செய்கின்றது. நூலாசிரியர் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறையில் கல்வி முகாமைத்துவ நிபுணத்துவ ஆலோசகராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18520).