மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 168 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையின் முன்னாள் பேராசிரியர் மா.சின்னத்தம்பி அவர்களின் நாற்பதாண்டுகால யாழ்ப்பாணத்திலான கற்பித்தல் பணியின் நிறைவு ஞாபகார்த்த வெளியீடு. 1973இல் கற்பிக்கத் தொடங்கிய இவர் தனது நாற்பதாண்டுக்கால கற்பித்தற் பணியின் நிறைவின் ஓர் அடையாளமாக இந்நூலை எழுதியிருக்கிறார். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளில் மாற்றங்கள், உயர்கல்வியில் பெண்கள்: சமூக பொருளாதார அணுகுமுறை, பாடசாலைகளும் சமூக மாறுதல்களும், கல்வியில் சரிநிகரும் சமத்துவமும், சிறிய பாடசாலைகளும் அபிவிருத்தியும், சிறிய பாடசாலைகளில் சரிநிகரும் சமத்துவமும், பாடசாலைகளின் வினைத்திறன், பாடசாலைக் கல்வியின் செலவுகள், ஆசிரியர்களது கடமைகளும் பிரச்சினைகளும், ஆசிரியர் செயலாற்ற முகாமைத்துவம், பாடசாலைகளும் பெற்றோரும், மாணவர்களும் பரீட்சைகளும், மாணவப் பருவமும் விழிப்புணர்வும், பாடசாலைகளும் விடுதிகளும், பாடசாலைகளும் சிறுவர் ஊழியமும், பாடசாலைகளும் தொழில் நிறவனங்களும், துன்புறும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான பாடசாலைகள் ஆகிய 18 தலைப்புகளில் இந்நூல் விரிந்துள்ளது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த சமூக விஞ்ஞான நூலுக்கான பரிசை வென்ற நூல்.